Monday, January 26, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்யமுடியாது- முபீன்

By Afzal On Monday, Jan 26, 2015
எம்.எஸ்.எம். நூர்தீன் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்யமுடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்தியகுழுக் கூட்டம், மத்திய குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அம்பலமானது தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி ஜப்பாரின் அதிகாரத் துஸ்பிரயோகம்

By Afzal On Monday, Jan 26, 2015
பைரூஸ்
தென்கிழக்குப் பல்கலைக் கழக கலைப்பீடத்தினால் 'உள்ளக ஆய்வுப்பட்டறை மாநாடு' ஒன்று இன்று 2015.01.26ம் திகதி நடை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் பிரதம அதிதியாக பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.எஸ்.எம்.இஸ்மாயீல் அவர்கள் கலந்து கொள்வது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருள் சூழ்ந்த கல்முனை அரசியல் களம்

By Afzal On Monday, Jan 26, 2015
றிஸ்வான்
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் முக வெற்றிலை என்ற வரலாற்று புகழுடன் திழைத்துக் கொண்டிருப்பதும் கிழக்கிலங்கையின் கிழக்கே வங்களா விரிகுடாவையும் வடக்கே பெரிய நீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லைகளாகக் கொண்ட மாபெரும் மாநகரமே கல்முனை. 

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 1,06,780பேர் அடங்கிய மூவினத்தையும் சேர்ந்த பிரஜைகள் இங்கு காணப்படுகின்ற போதும் அதிகளவில் முஸ்லிம் மக்களே வசித்து வருகின்றனர் என்பது பொதுவான விடயமாகும்.

Sunday, January 25, 2015

முஸ்லிம் காங்கிரஸுக்கு அமைச்சு பதவிகள் - இவ்வளவும் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..??

By Afzal On Sunday, Jan 25, 2015
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

புதிய அரசு அமைந்த பின்னர் எங்களுக்கு எவ்வித அமைச்சு பொறுப்புகளும் வேண்டாம் என்ற பிடிவாத போக்குடன் காணப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை அரசு தந்தாலே போதுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

Saturday, January 24, 2015

ஏமாற்றமடைந்த காங்கிரஸின் கோட்டை - கல்முனை மக்கள் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போராளியின் திரந்த மடல்

By Afzal On Saturday, Jan 24, 2015
- பைரூஸ் -
நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிக்கு அதிகாரங்கள் அழிக்கப்படுது, அதுவும் அரசின் பங்காளியாக இருக்கும் நிலையில் அதிகாரங்கள் வழங்கப்படுவதையே மக்கள் விரும்புவர். 

இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க யின் சார்பில் போட்டியிட்டு சுமார் 45,000 ற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப்பெற்று 1ம் இடததைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ஹரீஸ்  புதிய அரசாங்கத்தில் இம்முறை மு.கா ற்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளில் உள்ளடக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வழங்கப்படாமை மிகவும் ஏமாற்றத்திட்குரியது.

Friday, January 23, 2015

முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பான சுமந்திரன் எம்.பியின் கருத்துக்கு - திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய கிளை பதில்

By Afzal On Friday, Jan 23, 2015
-திருகோணமலை மத்திய கிளை-
நேற்று நீங்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஸ்ரீ.ல.மு.கா கட்சியை கடுமையாக விமர்சித்தீர்கள் அத்துடன் சில கேள்விகளையும் கேட்டீர்கள்.

அதே வினாவை நான் உங்களிடத்திலே கேட்கிறேன். உங்களுடைய கொள்கை என்ன? உங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த சேவை என்ன?

21 வருடங்கள் அரசியல் அதிகாரம் இல்லாமல் அநாதையாகிவிட்ட கல்முனை மக்கள்

By Afzal On Friday, Jan 23, 2015
எம்.இம்றாஸ்
கல்முனை நகரத்திற்கு 21 வருட அரசியல் அதிகாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற விடயம் இன்று கல்முனை எங்கும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்த ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் மறைவிற்குப் பிறகு கல்முனை மண்ணுக்கு எந்தவித அரசியல் அதிகாரமும் கிடைக்கவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அதிகூடிய சதவீதத்தில் வாக்களிக்கின்ற ஒரு இடமாக கல்முனைப் பிரதேசம் விளங்குகின்றது. அதேபோன்றுதான் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக 90 சதவீதமான மக்கள் வாக்களித்த இடமாகவும் கல்முனை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இந்திய பீகாரில் அப்பாவி முஸ்லிம்களை உயிருடன் எரித்த இனவாத இந்துக்கள்

By Afzal On Friday, Jan 23, 2015
பஹத்
நேற்று முன்தினம் இந்தியாவின் வட மாநிலமான பீகாரில் மூன்று அப்பாவி முஸ்லிம்களை இனவாத இந்துக்களால் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர்.

இந்துப்பெண் மூலம் கல்லத்தொடர்பு கொண்டு குடிபோதை  மூலம் கானமல் போன இந்துதீவிரவாதி  ஒருவனின் உடல் ஒருவாரத்துக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்ட கோபத்தில் இந்து மதவெறியர்களால் முஸ்லிம்களின்  பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.

Thursday, January 22, 2015

முஸ்லிம்களின் கொலைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் - அமைச்சர் ஹசன் அலி

By Afzal On Thursday, Jan 22, 2015
-பைரூஸ்-
மஹிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சமய ரீதியான கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் , சுகாதார ராஜாங்க அமைச்சருமான ஹசன்அலி, இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் இந்த விடயம் முன்கொணரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

ஜெமில், தவத்தின் சூழ்ச்சிகளால் அமைச்சுப் பதவியில் புறக்கணிக்கப்பட்ட ஹரீசும்,கல்முனை மண்ணும்

By Afzal On Thursday, Jan 22, 2015
- இர்பான்-
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ராஜாங்க அமைச்சும் இன்னுமொரு பிரதியமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.

எனது இந்த யூகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. என்றாலும் ஒரு விடயம் பிழைத்து விட்டதுதான். நாடாளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், ஹரீஸ் ஆகியோருக்கே இவை கிடைக்குமென நான் நினைத்தேன். ஆனால் ஹஸன் அலிக்கு ராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, January 21, 2015

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவுக்கும் இயிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது

By Afzal On Wednesday, Jan 21, 2015
பைரூஸ்
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களுக்கும் இயிடையிலான வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த சந்திப்பொன்று சற்று முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி தலமையில், ஜனாதிபதி செயலகதில் இன்று இடம்பெற்றது

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக அஸ்டின் பெர்ணான்டோ நியமனம்

By Afzal On Wednesday, Jan 21, 2015
றிஸ்வான்
கிழக்கு மாகணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றியவரும் தற்பொழுது ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசராகவும் நியமிக்கப்பட்டுள்ள அஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட உள்ளார்.

கொழும்புக்கு பாஸ்போர்ட் எடுக்க சென்ற அக்கரைப்பற்று சகோதரனை காணவில்லை

By Afzal On Wednesday, Jan 21, 2015
பைரூஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் எனது அன்புக்குரிய உடன்பிறவா சகோதர்களே!

எனது சகோதரர் சமீம் உம்ராஹ் செல்வதற்காக பாஸ்போர்ட் எடுப்பதற்கு கொழும்புக்கு சென்றார்.

நேற்று கொழும்பு மருதானையில் வைத்து லுஹர் தொழுகைக்காக சென்றவர் வரவில்லை.

Tuesday, January 20, 2015

ஈமான் கொண்ட முஸ்லிம்களே - சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக போராடும் எமது சகோதரியை அதில் இருந்து மீட்க உதவிடுவோம் வாருங்கள்

By Afzal On Tuesday, Jan 20, 2015
சாயந்தமருது -17 குத்தூஸ் வைத்திய வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய எஸ். ஏ. நளீறா என்ற எமது சகோதரி இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் இவருடைய உடல் நிலை பாதிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனவும் சமூக இணையத்தளங்களில் பதிவு செய்திருந்தோம், அல்ஹம்து லில்லாஹ் சுமார் 1,60,000 ரூபா மாத்திரமே வெளிநாட்டிலுள்ள சகோதரர்கள் வங்கிக் கணக்கில் போட்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.